கரூர்: வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை ஆட்சியர் மலர்விழி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, அரசு பேருந்து, ஆட்டோ வாகனங்களில் 100 விழுக்காடு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆட்சியர் மலர்விழி எடுத்துரைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், காவல்துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : திமுக கூட்டணி கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட தொகுதிகள்!