கரூர்: கரூர் மாவட்டம் நச்சலுரை சேர்ந்த வடிவேல்(30) என்பவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களுக்கும் இடையே 2020ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பக்கத்து வீட்டு பெண்மணியை தகாத வார்த்தையால் பேசியதற்காக அதே பகுதியை சேர்ந்த அப்பெண்ணின் உறவினர்கள் வேலு என்ற வேலுசாமி((38) , சதீஷ்குமார்(35), சங்கர்(24) ஆகிய மூன்று பேர் சேர்ந்து, வடிவேலை சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவத்தில் வடிவேலு படுகாயத்துடன் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுதொடர்பாக குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கரூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வந்தது. இந்நிலையில், விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நேற்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் வடிவேலுவை கொலை குற்றத்திற்காக மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதமும் விதித்தார். அபாராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ‘வெள்ள பாதிப்பு பகுதிகளில் தடையில்லா மின்சாரம் விநியோகம்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி