ETV Bharat / state

விழுப்புரத்தை தொடர்ந்து கரூரிலும் தீண்டாமை கொடுமை சர்ச்சை.. தமிழக அரசுக்கு தலித் அமைப்பு வைக்கும் கோரிக்கை! - பட்டியலினத்தவருக்கு வழிபாடு மறுக்கப்பட்ட விவகாரம்

கரூர், வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்குள் சென்ற பட்டியல் சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா பொது வழிபாட்டு உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

a
பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அரசு மீட்டு தர வேண்டும் என தலித் விடுதலை இயக்கத் தலைவர் கோரிக்கை
author img

By

Published : Jun 12, 2023, 9:25 PM IST

தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா சிறப்பு பேட்டி

கரூர்: கடவூர் தாலுகா வீரணம்பட்டி பகுதியில் உள்ள பட்டியலயின மக்கள் கடந்த ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்ற வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில், கோயிலுக்குள் சென்று உள்ளே வழிபடக் கூடாது என தடுத்த விவகாரம் தற்போது தமிழக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியலினத்தவர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கோயில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில், அதேப் போன்ற ஒரு சம்பவம் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டியில் நடைபெற்ற காளியம்மன் திருவிழாவில் நடைபெற்று முடிந்து உள்ளது. பலக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போது பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என மற்றொரு தரப்பினர் தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

மேலும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது கோயிலுக்குள் பட்டியலின மக்களை வழிபட தடுத்ததாக உள்ளிட்ட புகார் குறித்து கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் தாரான பட்டியலின இளைஞர் வீட்டிற்கு 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் காளியம்மன் கோயிலை சீல் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்த போது, அவரை சிறைப் பிடித்து மண்ணை வாரி தூற்றி போராட்டம் நடத்தியதாக 21 பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வீரணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றபோது, அவரை தடுத்து நிறுத்தி சாதிப் பெயரை சொல்லித் திட்டியதாக வழங்கப்பட்ட புகாரில் இருவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனடையே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களைச் சந்தித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் மற்றும் குளித்தலை சரக துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி ஆகியோரை சந்தித்து கள ஆய்வில் விவரங்களை சேகரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மா.வி.சசிகுமார் மற்றும் சம நீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.அண்ணாதுரை, செய்தி தொடர்பாளர் கு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், கரூர் நேற்று இரவு ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவருக்கு கோயிலுக்குள் சென்று வழிபட சென்ற போது தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து நடைபெற்ற கள ஆய்வு சிறப்பு பேட்டி அளித்தார்.

அதில், "கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா வீரணம்பட்டி காளியம்மன் கோயிலை கடந்த நான்கு தலைமுறையாக பட்டியலினத்தவர் மற்ற சமூகத்துடன் இணைந்து சமத்துவமாக கோயில் திருவிழாவை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு கோயில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுச்சூழல் எழுப்பப்பட்டதால் அங்கு பட்டியலினத்தவர் உள்ளே செல்ல சில மதவாத அமைப்புகள் தூண்டுதலில் பேரில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் உள்ளவர்களை அரசு கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பட்டியலின சமூகத்திற்கு வழிபடும் உரிமையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 2010 ஆம் ஆண்டு வெள்ளகோயில், உத்தமபாளையம் மாரியம்மன் கோயிலில் தலித் மக்களுக்கு வழிபாடு நடத்த உரிமை மறுக்கப்பட்ட போது அரசு கோயிலைப் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் கடந்த 12 ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில், இன்று கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் ஆகியவை கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டு அரசு அதிகாரிகள் கோயிலை பூட்டி உள்ளனர். கோயிலை பூட்டி வைப்பதற்குப் பதிலாக அனைத்து சமூகத்தினரையும் பொது வழிபாட்டு உரிமையை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தலித் விடுதலை இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

மேலும் “கரூர் மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையை பாராட்டுவதுடன், கரூர் வீரணம்பட்டி பொதுமக்களிடம் ஒற்றைக் கோரிக்கை வழிபாடும் உரிமை என்பதே. எனவே அரசு இதனை உறுதி செய்ய வேண்டும். பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அரசு மீட்டு தர வேண்டுமே தவிர, கோயிலை பூட்டி வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தக் கூடாது. இதனை வலியுறுத்தும் விதமாக தலித் விடுதலை இயக்கம் மற்றும் சம நீதிக் கழகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.

இதுக் குறித்து வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த சென்ற போது தாக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இதுவரை வழிபட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக கோயிலுக்குள் உள்ளே சென்று வழிபடக்கூடாது என தடுத்து நிறுத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

சாதிய மோதல்களை தூண்டிவிட்டு ஒற்றுமையை சீர்குலைக்க சதி நடைபெற்று உள்ளது. மீண்டும் காளியம்மன் கோயிலில் ஏற்கனவே இருந்த நடைமுறையை பின்பற்றும் வகையில், அனைத்து சமூகத்தினரும் சென்று சமத்துவமாக வழிபட அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: "நான் எப்படி உயிரோடு இருக்கேன்னு தெரியல" - ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய சென்னை தரணி கூறிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.