ETV Bharat / state

செந்தில் பாலாஜியை எப்படி சமாளிப்பது? கூட்டணி கட்சியினருடன் தம்பிதுரை ஆலோசனை - தம்பிதுரை

கரூர்: தொகுதிக்குள் சக்திவாய்ந்த நபராக வலம்வரும் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மக்களவைத் தேர்தலுக்கு வகுக்கும் வியூகங்களுக்கு எந்த மாதிரியான அஸ்திரங்களை கையிலெடுக்கலாம் என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் தம்பிதுரை ஆலோசனை நடத்தினார்.

durai
author img

By

Published : Mar 19, 2019, 2:37 PM IST

மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். சமீபத்தில் அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்திருக்கும் செந்தில் பாலாஜி கரூரில் எப்படியாவது திமுக கூட்டணி வேட்பாளரை வெல்லவைத்து அறிவாலயத்தின் குட் புக்கில் வலுவாக இடம்பெற வேண்டுமென நினைப்பதாகவும், தம்பிதுரையை வெல்லவிடவே கூடாது என்பதில் தீர்க்கமாக பணிகளை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

எனவே செந்தில் பாலாஜியின் வியூகங்களை தம்பிதுரை தாக்குப்பிடிக்க வேண்டும் எனவும், கரூரில் தம்பிதுரைக்கு உண்மையான சவால் காத்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் கூட்டணி கட்சியினருடன் தம்பிதுரை ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கியமாக செந்தில் பாலாஜியின் வியூகங்களை சமாளிப்பது குறித்து ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இன்று பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து தம்பிதுரை பாமக மற்றும் தேமுதிகவினரையும் சந்திக்க இருக்கிறார்.

இதற்கிடையேஇன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது தனித்து போட்டியிட்டார்கள் இப்போது இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது” என்றார்

Intro:தம்பி துரை கூட்டணி கட்சி உடன் சந்திப்பு

Body:கரூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய தனியாருக்கு சொந்தமான ஹோட்டலில் இன்று அதிமுக மக்களவை வேட்பாளரான தம்பிதுரை கூட்டனி கட்சிகளுடன் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசித்து வருகிறார்.

அதனடிப்படையில் இன்று பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து தேர்தல் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போன்ற கட்சிகளை சந்திக்க உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்பொழுது தனித்து போட்டியிட்டார்கள் இப்போது இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது என்றும் கூறினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.