ETV Bharat / state

'என்னது பள்ளி மாணவர்கள் கோழி வளர்க்க வேண்டுமா?' - கொந்தளித்த பெற்றோர் - பள்ளி மாணவர்கள் நாட்டுக் கோழி வளர்க்க வேண்டுமா

கரூரில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நாட்டுக் கோழி வளர்க்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார் வெளியிட்ட சுற்றறிக்கையால் ஆசிரியர்கள் சங்கம், பெற்றோர் கொந்தளித்துள்ளனர்.

என்னது பள்ளி மாணவர்கள் கோழி வளர்க்க வேண்டுமா?

author img

By

Published : Feb 2, 2022, 9:21 PM IST

கரூர்: முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், அரசு, அரசு உதவிபெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று (பிப் 01) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில், "கரூர் மாவட்டத்திலுள்ள வள்ளுவர் மேலாண்மை கல்லூரி நிர்வாகம், பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் செலவில் சேமிப்புக்கணக்குத் தொடங்கி, சேமிப்பை ஊக்குவிக்க நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற சுயதொழிலைத் தொடங்கி, மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவும் கோரியுள்ளது.

எனவே, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், பள்ளிக்கோ, மாணவர்களுக்கோ செலவு ஏற்படுத்தாத வகையில், பள்ளி மாணவர்கள் நலன், ஆசிரியர்கள் நலன் பாதிக்காத வகையில், இந்நிகழ்வில் எவ்விதப் புகாருக்கும் இடமின்றியும், இதுசார்ந்து ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் இவ்வாணை உடனே ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

கண்டனம் எழுப்பிய ஆசிரியர்கள் சங்கம்

இத்திட்டத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கரூர் மாவட்டச் செயலாளர் மலைக்கொழுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சமூகத்தின் பார்வையில் ஆச்சரியத்தையும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது.

ஏற்கெனவே மாணவர்கள் புறா வளர்ப்பது, கோழி வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு கல்வி செயல்பாடுகளில் நாட்டம் குறைந்துள்ள சூழலில், ஏதோ ஒரு தனியார் கல்லூரியின் பெயரிலும், அவர்கள் உதவியின் பெயரிலும் அரசுப் பள்ளிகளில் கோழி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த சொல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது, வேதனைக்குரியது.

கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், இத்திட்டத்தை பரிசீலனை செய்து, செயல்முறைகளை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்குப்பணம் வருகிறது என்பதற்காக பன்றி வளர்க்க சொல்லி, நாளை யாரும் வந்து நின்று விடக்கூடாது. குலத்தொழிலை இதன் வழியாக திணித்து, குலத்துக்கு ஒரு நீதி எனும் மனுநீதியை நிலை நாட்டும் முயற்சியின் தொடக்கமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.

ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

இதுபோன்ற செயல்முறை திட்டங்களால் பணம் தான் பிரதானம் எனில் படிப்பு எதற்கு? என்ற எண்ணம் இயல்பிலேயே மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடும். எனவே, கரூர் முதன்மைக் கல்வி அலுவலர், வெளியிட்டுள்ள செயல்முறையை எவ்வித காரணமுமின்றி உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சுற்றறிக்கை
சுற்றறிக்கை

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி கழகத்தின் (TNHHSSGTA ) சார்பாக இந்த செயல் முறைகளை வன்மையாக கண்டிப்பதோடு, விரைவாக திரும்பப் பெறவும் வலியுறுத்துகிறோம்.

அதே நேரத்தில் இது தொடருமானால் விரைவில் இந்த செயல் முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

கொந்தளித்த பெற்றோர்

இது குறித்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர் மதன்குமாரிடம் கேட்டபோது, “மாணவர்களுக்கு பள்ளியில் கல்வியை மட்டுமே முதன்மையாக கற்பிக்கும் பணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஊடகங்களில் வருவதைப்போல கோழி வளர்ப்பு மேற்கொள்ள மாணவர்களை நிர்பந்திக்கவில்லை.

கண்டனம் தெரிவிக்கும் ஆசிரியர்கள் சங்கம்

தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் சம்பந்தம் இல்லை” என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறை தேர்வில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.