கரூர் மாவட்டத்தில் பல முறை சூரியகாந்தி பூவுக்கு விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள்கள் விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது. இருந்தபோதிலும் தற்போது அப்பகுதியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பூ அறுவடைக்குத் தயாராகி இருக்கின்றன.
இந்த சூரியகாந்திப் பூவானது மூன்று மாத பயிராகும். கோடை காலத்திலும் நன்கு வளரக்கூடிய இப்பூ, சிறிதளவு நீரைப் பயன்படுத்தி அறுவடைசெய்ய முடியும். எனினும் இதனை விற்பனை செய்வதற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதிக்குக் கொண்டுசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி பூவுக்கு விற்பனை நிலையம் அமைத்தால் இன்னும் பல அறுவடை செய்யலாம் எனக் கூறுகின்றனர்.