ETV Bharat / state

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் போராட்டம் - தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் போராட்டம்

கரூர்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவ, மாணவிகள் பள்ளியை புறக்கணித்து பெற்றோர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள்,பெற்றோர்களுடன் காத்திருப்பு போராட்டம்

author img

By

Published : Feb 20, 2020, 7:28 AM IST

கரூர் மாவட்டம் ஜெகதாபியை அடுத்து உள்ளது பொரணி கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் சுஜாதா ஷியாமளா என்பவர் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் வேண்டும் என்பதற்காக சரியாக பள்ளிக்கு வராத மாணவர்களையும், கைடுகள் வாங்காதவர்களையும் முட்டி போட வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும், அதனால் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டும் பெற்றோர், கடந்த 15 தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.

ஆனால் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை பள்ளி மாணவர்களைப் பெற்றோர் வகுப்புக்கு அனுப்பாமல், ஊர் பொது இடத்தில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள், பெற்றோர்களுடன் காத்திருப்பு போராட்டம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார். பின்பு, பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவலால் உள்ளிருப்பு போராட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.