ETV Bharat / state

'அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' - அரசு ஊழியர்கள் கோரிக்கை

கரூர்: அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்ரவரி 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுமென அரசு ஊழியர்கள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

'Strike will take place if government employees do not fulfill the demand'

author img

By

Published : Jan 20, 2021, 8:28 AM IST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு கரூர் நாரதகான கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஜயகுமார், மதுரை மாவட்ட தலைவர் மூர்த்தி, தேனி மாவட்ட தலைவர் வரதராஜ், திருச்சி மாவட்ட தலைவர் விவேகானந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

மண்டல மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மங்களபாண்டியன், மாநில துணைத் தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மங்களபாண்டியன், "ஜாக்டோஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 5,068 பேருக்கு வழங்கப்பட்ட 17பி குற்றவியல் குறிப்பாணைகளை ரத்து செய்யவேண்டும். தமிழ்நாட்டில் அரசு துறையில் உள்ள 4.5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். சிறப்பு ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி மதுரையில் மாநில அளவிலான ஆயத்த மாநாட்டில் அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழ்நாடு அரசு, ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.

தவறினால் தற்போது நடைபெறும் மாநாடு அரசியல் திருப்புமுனை மாநாடாக அமையும். மேலும் மாநாட்டு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப். 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர் சங்கங்கள் மறியல், சிறைநிரப்பும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.