கரூர் அருகே புகலூர் பகுதியில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகமும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும் இணைந்து நடத்தும் 67ஆவது மாநில அளவிலான ஆண்கள் சாம்பியன்ஷிப் கோப்பை கபடிப் போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியானது தொடர்ந்து மூன்று நாட்கள் (ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில்) நாக் அவுட் முறையில் நடைபெறும்.
இதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 37 மாவட்டங்களைச் சேர்ந்த சிறந்த அணிகள் மூன்று ஆடுகளங்களில் விளையாடிவருகின்றனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில நிர்வாகிகள் கபடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விளையாட்டினை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து இரண்டாம் சுற்று விளையாட்டினை திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் பங்கேற்று கபடி வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது?
நடந்து முடிந்த முதல் இரண்டு சுற்றுகளில், திண்டுக்கல், விருதுநகர், சென்னை, சேலம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வந்த வீரர்கள் விளையாட்டில் பங்கேற்றனர். மாநில அளவிலான கபடிப் போட்டியைக் காண ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டனர். மேலும் இந்தப் போட்டியில் சிறந்த வீரர்கள் தேசியளவில் நடைபெறும் கபடிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.