கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர், வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் கொசுவலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், வீடு திரும்பிய சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட பெற்றோர், சிறுமியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியை வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செயத காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவணனை கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் சரவணன் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது. மேலும், கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா அமர்வில் நடைபெற்ற விசாரணையில் சரவணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!