கரூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா வருகின்ற 27ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 500 இடங்களில் இருந்து மொத்தம் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் இந்த முப்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரூரிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அரசியல் வரலாற்றில் 50 ஆயிரம் பேரை காணொலி காட்சி மூலம் இணைந்து திமுக சார்பில் முப்பெரும் விழா கூட்டம் கரூரில் நடத்துவது இதுவே முதல் முறையாகும். பொய் பேசுவதிலும், மக்களை ஏமாற்றுவதிலும் இரண்டு பெரிய ஆட்கள் உள்ளனர். ஒருவர் பிரதமர் மோடி, மற்றொருவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும் மக்களைச் சந்திக்க திமுக தயாராக உள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: கரூர் இளநீர் வியாபாரி கொலை வழக்கு - மூன்று பேர் கைது