ETV Bharat / state

'சென்ற இடங்களில் கேக், ஜூஸ், நெற்றியில் குங்குமம்' - பரப்புரையில் இறங்கி அடிக்கும் செந்தில் பாலாஜி

கரூர்: வாகனம் செல்ல முடியாத நிலையில் உள்ள இடங்களில் நடைப் பயணமாகவும்; இருசக்கர வாகனத்தில் சென்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செந்தில் பாலாஜி, Senthil Balaji, கரூர் மாவட்டச்செய்திகள், கரூர், கரூர் மாவட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, Senthil Balaji Action Campaign got great impact among voters,  செந்தில் பாலாஜி அதிரடி பிரச்சாரம் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கலக்கம்
senthil-balaji-action-campaign-got-great-impact-among-voters
author img

By

Published : Mar 15, 2021, 1:56 PM IST

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்று மார்ச் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெங்கமேடு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அங்கு மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

வாக்காளர்கள் வீட்டிலேயே தயார் செய்த நீர் மோர், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கி உற்சாகப்படுத்தினர். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்காளர்களை தனித்தனியே சந்தித்து வாக்குச் சேகரிக்கும் செந்தில் பாலாஜியின் நடைப் பரப்புரைப் பயணத்தில் ஈடுகொடுக்க முடியாமல் திமுக நிர்வாகிகளே திணறி வருகின்றனர்.

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பரப்புரை

வழக்கமாக திறந்த வெளிப் பரப்புரை வாகனங்களில் சென்று வாக்காளரிடம் வாக்கு சேகரிப்பது வழக்கம். அதுவும் மக்கள் கூடும் முக்கிய சந்திப்பு இடங்களில் மட்டும் திறந்தவெளி வாகனத்தில் மக்களை ஓரிடத்தில் கூட்டி வாக்கு சேகரிப்பது இதுவரை கரூர் மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பயன்படுத்தும் தேர்தல் யுக்தி. ஆனால், செந்தில்பாலாஜி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதுடன் வீட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை கண்டால், உடனே காலில் விழுந்து வெற்றிபெற ஆசி வழங்குங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். செந்தில்பாலாஜி ஏற்கெனவே போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். தற்பொழுது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளார். செந்தில் பாலாஜியின் பணிவு, வாக்காளர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரதானக் கட்சி வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கடம்பன்குறிச்சி, வரப்பாளையம், சியாம்பாளையம், பால்வார்பட்டி பகுதிகளில் மார்ச் 14ஆம் தேதி இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். சியாம்பாளையம் காலனி பகுதியில் பிறந்தநாள் கொண்டாடத் தயாராக இருந்த சிறுமிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்பொழுது அச்சிறுமி செந்தில் பாலாஜிக்கும், உடன் வந்திருந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணிக்கும் கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் பள்ளத்தோட்டம் பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி அப்பகுதிக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் இருசக்கர வாகனத்தில் மண்சாலையில் இரவு நேரத்தில் சென்று, வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளாக பொது மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்க முடியாத நிலைதான் உள்ளது. அதனால் தான் இருசக்கர வாகனத்தில் வந்து வாக்கு சேகரிக்கும் நிலை உள்ளது. எனவே, தன்னை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து வாய்ப்புத் தாருங்கள். உங்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருகிறேன் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

செந்தில் பாலாஜி எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த மார்ச் 12ஆம் தேதி மதியம் கோடங்கிபட்டி கிராமத்தில் பரப்புரைத் தொடங்கி, பத்து பேருக்கு துண்டறிக்கையைக் கொடுத்துவிட்டு இரண்டு நாட்கள் பரப்புரைக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்.

தொடர்ந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வரும் செந்தில் பாலாஜியின் தடாலடி தேர்தல் பரப்புரை உத்திகள் திமுக தொண்டர்களை உற்சாகத்திலும்; கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள போட்டி வேட்பாளர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: காலில் விழுந்து வாக்கு சேகரித்த செந்தில்பாலாஜி, ஜோதிமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.