ETV Bharat / state

முட்டை வண்டியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் - karur manmangalam

கரூர் அருகே முட்டை வண்டியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மண்மங்கலம் அருகே முட்டை வண்டியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

author img

By

Published : Mar 14, 2021, 12:05 PM IST

கரூர் மாவட்டத்தில் மனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். எனவே, கண்காணிப்பு பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்று காலை 4 மணி அளவில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படை குழு மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, நாமக்கல் மாவட்டம் பொன்மணி கோழிப்பண்ணை S.P புதூர் பரமத்தி ரோடு என்ற முகவரி நோக்கி சென்ற முட்டை லாரியை சோதனை செய்தனர். வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் லத்துவாடி சுப்பிரமணி என்ற முகவரியை சேர்ந்த லாரி ஓட்டுநரிடம் ரூ 5,25,025 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதால் தொகை ரூ.5,25,025 பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தொகைக்கான சரியான ஆவணங்கள் எதுவும் சம்பந்தப்பட்ட நபரால் சமர்ப்பிக்கப்படாததால் மேற்படி தொகை முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு கரூர் சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனையும் படிங்க: விருதுநகர் பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலை தீ விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.