ETV Bharat / state

அரசு நியாயவிலைக் கடையில் காலாவதியான கோதுமை மாவு விற்பனை!

author img

By

Published : Jun 10, 2021, 7:15 AM IST

கரூர்: கொடையூர் நியாயவிலைக் கடையில் காலாவதியான கோதுமை மாவு விற்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sale-of-expired-wheat-flour-at-the-government-fair-price-shop

அனைத்து மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் காலை 9 மணிமுதல் மதியம் 12.30 வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரையும் மறு உத்தரவு வரும்வரை பொதுமக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள கடந்த 7ஆம் தேதி தமிழ்நடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தாளப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கொடையூர் நியாயவிலைக் கடையில் ஜூன் 9ஆம் தேதி கூலிநாயக்கனூரைச் சேர்ந்த காளியப்பன் மனைவி அருக்காணி வீட்டு உபயோகத்திற்காக உப்பு, தீப்பெட்டி, கோதுமை மாவு ஆகியவற்றை 60 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

பின்னர், அவர் நியாயவிலைக் கடையில் வாங்கிய கோதுமையை இரவு சமைப்பதற்காக எடுத்துப் பார்த்த பொழுது மாவு பேக்கிங் செய்யப்பட்ட தேதி 2020 ஜனவரி 17 என்றும், காலாவதி காலம் அடுத்த மூன்று மாதம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முல்லையரசு கூறுகையில், ”மக்கள் வாழ்வாதாரம் இழந்து தங்களது உணவுத் தேவைக்கு நியாயவிலைக் கடைகளை நம்பியுள்ளனர்.

அங்கு விற்கப்படும் பொருள்கள் தரமானதாகவும் குறைந்த விலையுடன் இருப்பதால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று நாள்தோறும் வாங்கிச் செல்கின்றனர் .

காலாவதியான கோதுமை மாவு விற்பனை

கொடையூர் நியாயவிலைக் கடையில் அருக்காணி என்பவர் வாங்கிச் சென்ற அரை கிலோ கோதுமை மாவு காலாவதியாகி விற்பனை செய்திருப்பது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

எனவே கரூர் மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர், மாவட்ட ஆட்சியர் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆய்வுசெய்து காலாவதியான பொருள்களைக் கண்டறிந்து அகற்றி மாவட்ட மக்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கைவைத்தார்.

இதையும் படிங்க: 'விண்ணைமுட்டும் கட்டுமான பொருள்களின் விலை; கட்டுப்படுத்துங்க ஸ்டாலின்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.