ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "நடிகர் விஜயை என் மகனாகப் பார்க்கிறேன்.
அவருக்கு நான் செல்வது என்னவென்றால் இப்போது சாதி, மதம் என பல்வேறு விஷயங்களைக் கடந்து எல்லோருடைய வீட்டுப் பிள்ளையாக விஜய் உள்ள நிலையில், சின்ன வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதில் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்ளவார்.
எந்த ஒரு கொள்கையில் அறிவிக்காமல் நடிகர் விஜய் முதலில் எதற்காக கட்சி ஆரம்பித்துள்ளார் என தெரிவில்லை. காங்கிரஸ் பேரியக்கம் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும், இந்தியா வலிமை பெற வேண்டும் என்ற கொள்கையில் தொடங்கப்பட்டது. அதே போல் தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும், இந்தி திணிப்பு கூடாது என்பதற்காக தான் திராவிட கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு கட்சியும் தொடங்குவதற்கு மூலக்கரு உள்ளது. ஆனால் இதெல்லாம் விஜய்க்குப் புரியவில்லை போல் தெரிகிறது. அவர் கொடியை அறிவித்த நிலையில் கொடியில் சொல்ல வருவது என்ன? அதில் உள்ள இரண்டு யானைக்கு என்ன விளக்கம் எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் ஊர் மக்கள் காத்திருப்பு போராட்டம்!
மேலும் கொள்கைகள் அறிவிக்காமல் மாநாடு நடத்துவது என்பது புள்ளி வைக்காமல் கோலம் போடுவது போல என விமர்சித்தார். நீட் எதிர்க் கூடியவர் பெண் சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட வேண்டும். நடிகர் விஜய் சொல்லும் கொள்கைகள் காங்கிரஸிலும் திமுகவில் இருக்கும் நிலையில் எது பிடித்ததோ அதில் இணைந்து விட வேண்டியதுதானே எதற்காகத் தனி ராஜ்யம்; ராஜ்யம் இல்லாமல் எங்கே தனி ராஜ்யம் எங்கே செய்யப்போகிறார்.
விவசாயிகள் நலம்பெற வேண்டும் என்றால் கள்ளுக்கடை திறப்பதில் தவறில்லை. கமல்ஹாசன், டி ராஜேந்திரன், குமாரிமுத்து, கருணாஸ் ஆகிய எல்லோரும் ஆரம்பித்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். அதனால் நடிகர் விஜய் கட்சி தேவையற்ற ஒன்று. எனக்குக் கூட அவருடைய நடிப்பை விட டான்ஸ் பிடிக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால் பாதிக்கப்படும் பெயர்களில் முதலில் சீமான் பெயர் தான் இருக்கும் அவர் பாதிக்கப்பட்டு இருக் கூடாது என்ற அக்கறை உள்ளது. மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது,முழுமையான மது விலக்கு இந்தியாவிலிருந்தது இல்லை,காங்கிரஸ் ஆட்சியில் பர்மீட் முறையில் மது விலக்கு இருந்தது.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் தலைமையிலான நல்ல ஆட்சி அமையும் சூழல் அமைந்துள்ளது.
அதிமுக ஓட்டு வங்கி விஞ்ஞான ரீதியாக இபிஎஸ் 10% சரிந்ததுள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால் ஆனால் 30%வாக்கு வங்கி அதிமுகவில் இல்லை" என தெரிவித்தார்.