கரூர் நகராட்சிக்குட்பட்ட 47ஆவது வார்டு செல்லாண்டிபாளையம் சாலைபுதூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் அவர்கள் கரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று (பிப். 18) செல்லாண்டிபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர், குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் ஆர்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்ததினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஆறு மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி சரியாக குடிநீர் விநியோகம் செய்யாமல் கரூர் நகராட்சி அலுவலர்கள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
கரூர் நகராட்சி குடிநீர் வழங்கல் அலுவலர்கள், உதவி பொறியாளர் மஞ்சுநாத், காவல்துறையினர் இன்று மாலைக்குள் குடிநீர் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது" என்றனர்.
இதையும் படிங்க:சரியாக விநியோகிக்கப்படாத குடிநீர்: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்