தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி 7ஆவது நாள் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய செயற்குழு உறுப்பினர் சந்துரு தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 7 வருவாய் வட்டத்தில் பணியாற்றும் 210 வருவாய்த் துறை பணியாளர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் இன்று வரை ஏழாவது நாளாக பணியை புறக்கணித்து, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களிலும் அரசு பணிகள் தேக்கமடைந்திருப்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாநில சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க : ஓபிஎஸ்ஸின் 'கடைசி' பட்ஜெட்: மீண்டும் அரியணை ஏற்றும்விதமாக அதிரடி அறிவிப்புகள் இடம்பெறுமா?