ETV Bharat / state

மனைவியைப் பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி ஆசிரியர்! - private school teacher suicide

கரூர்: தாய் வீட்டிற்குச் சென்ற மனைவி, வெகுநாள்களாக வீட்டிற்குத் திரும்பிவராததால், தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியை பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்த பள்ளி ஆசிரியர்!

author img

By

Published : Apr 26, 2020, 10:33 AM IST

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் சுபாஷ் (25), தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் சர்மிளா (25) என்பவரைக் காதலித்து, கடந்த 50 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இருவரும், சுபாஷின் வீட்டில் தங்கி குடும்பம் நடத்திவந்தனர்.

மனைவியைப் பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி ஆசிரியர்!

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டுவருவதாகக் கூறி, சர்மிளா கிளம்பினார். பின்னர் தாய் வீட்டிற்குச் சென்ற அவர், மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.

சுபாஷ் வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்தும், சர்மிளா வரவில்லையாம். இதனால் மனமுடைந்த சுபாஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சுபாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தற்கொலை சம்பவம் குறித்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வாங்கல் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: முகாமில் ஏற்பட்ட மனமாற்றம்... வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர ஆதரவற்றோர் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.