அதிமுக வேட்பாளரை ஆதரித்து பவர் ஸ்டார் பரப்புரை - Krishnarayanapuram constituency AIADMK candidate Thanesh alias Muthukumar
கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பவர் ஸ்டார் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.
கரூர்: கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமாரை ஆதரித்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "ரத்தத்தின் ரத்தமான ரசிகர்களே, தாய்மார்களே முத்துக்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவர் இந்த மண்ணின் மைந்தர் ஆவார்.
நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு அருகிலேயே இருக்கக்கூடிய வேட்பாளர். அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் 50 கிலோமீட்டருக்குத் தொலைவிலிருந்து வர வேண்டும்.
முதலமைச்சர் பழனிசாமியின் நல்லாட்சித் தொடர வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு உருளைகள் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.