ETV Bharat / state

போலியோ சொட்டு மருந்து தினம் 2022 - தொடங்கிவைத்த அமைச்சர்! - Polio day 2022

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 5 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து இன்று (பிப். 27) வழங்கப்படும் நிலையில், கரூரில் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி முகாமை தொடங்கிவைத்தார்.

போலியோ சொட்டு மருந்து தினம் 2022- துவங்கி வைத்த அமைச்சர்!

author img

By

Published : Feb 27, 2022, 9:12 AM IST

சென்னை: நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பெரும்பாலான போலியோ பாதிப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 27) இந்த ஆண்டிற்கான சொட்டு மருந்து தினமாகும். தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் அமைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் , அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என பல்வேறு இடங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி அளவில் இந்த முகாம்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 51 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று 825 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார். தவறாமல், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:மகா சிவராத்திரி: எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அனைத்து சிவாலயங்களிலும்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.