கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்தவர் மோகன்ராஜ் (38). இவர் நேற்று (நவ.02) இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பணியாற்றிய நிலையில், இன்று (நவ.03) அதிகாலை வீடு திரும்பியவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது, உடல் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவலர்கள் பணியின்போது உயிர் இழக்கும் சம்பவம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
இதுதொடர்பாக மன உளைச்சல் பயிற்சி வகுப்புகள், யோகா போன்றவற்றை காவல்துறையினருக்கு அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் காலமானார்!