கரூர் மாவட்டம் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் மேல அக்ராஹரத்தில் வசிப்பவர் பத்மநாபன். இவர் சித்த மருத்துவம் படித்து விட்டு அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர், சித்த மருத்துவத்திற்கு பதிலாக ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்தும், ஊசி போட்டும் மருத்துவம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமையிலான குழுவினர் அவருடைய மருத்துவமனையை சோதனையிடச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த மருத்துவர் பத்மநாபன் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டபோது 14 வகையான ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக இணை இயக்குனர் பாக்கியலட்சுமி மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் போலி மருத்துவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் பஞ்சலோக அம்மன் சிலையை மீட்ட காவல் துறை!