கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னதாக திருச்சி சரக டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள ஆனி விஜயா இன்று கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று பணிகளை மேற்பார்வையிட்டார். மாவட்டத்திலுள்ள அனைத்துக் காவல் ஆய்வாளர்களும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால், அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா வைரஸ் தொற்று காலத்தில் காவல் துறை பொதுமக்களை வைரசிலிருந்து பாதுகாத்துவருகிறது. பொதுமக்களிடம் காவல் துறையினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாக காவல் துறையில் உயர்மட்டத்திலிருந்து, கீழ் நிலையில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.