கரூர்: கரூர் மாவட்டம், புகலூர் அருகே உள்ள மசக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). இவர் புகலூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணம் ஆகிய நிலையில், 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
காகிதபுரம் டிஎன்பிஎல் காகித ஆலை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிவக்குமார், கடந்த ஒரு வாரமாக, கரூர் புன்னம் சத்திரம் சாலையில் உள்ள மசக்கவுண்டன்புதூரில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் இன்று (அக்.17) தற்கொலை செய்து கொண்ட நிலையில், இருந்ததைக் கண்டு, பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு உரியது வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட டிஎன்பிஎல் காகித ஆலை ஊழியர் சிவகுமார் ஆலையின் கொள்முதல் பிரிவில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனால், சிவகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் டெங்கு அறிகுறியுடன் 9 வயது சிறுவன் உயிரிழப்பு!