ETV Bharat / state

'மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சம்' - அன்புமணி குற்றச்சாட்டு - மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சம்

’’மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவது போல் சூழல் உள்ளது’’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அன்புமணி குற்றச்சாட்டு
அன்புமணி குற்றச்சாட்டு
author img

By

Published : Jun 12, 2022, 10:47 PM IST

கரூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஜூன் 12) வருகை தந்தார். பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்ட பாமக சார்பில் கரூர் - கோவை சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறுகையில், "காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா அரசு மேகதாது அணை திட்ட அறிக்கை சம்பந்தமாக விவாதிக்க உள்ளதாகத் தெரிகிறது. இது சட்டத்துக்கு எதிரானது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. இக்கூட்டம் நடைபெறக்கூடாது. அப்படி நடைபெற்றாலும் அதில் மேகதாது திட்டம் சம்மந்தமான விவாதம் மேற்கொள்ளக்கூடாது. இதனை வலியுறுத்தி கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாமக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவு: நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இது சம்பந்தமாக முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த முறையீட்டில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்தில் இருந்து மேகதாது அணை திட்டம் தொடர்பான குறிப்பு நிகழ்ச்சி குறிப்பிலிருந்து(Agenda) நீக்க வலியுறுத்த வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.

அன்புமணி குற்றச்சாட்டு

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படுவதற்கு முன்பே 140 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணைகள் கர்நாடகாவில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மேட்டூர் அணை 93 டிஎம்சி கொள்ளளவு மட்டும் கொண்ட அணையாக உள்ளது. அதிலும் கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டுமே பருவ மழைக்காலங்களில் கிடைக்கிறது. அதனையும் தற்பொழுது தடுக்கும் வகையில் கர்நாடகா சட்டசபையில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். எதிர்வரும் கர்நாடகா சட்டமன்றத்தேர்தலுக்காக அங்கு ஆளும் பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் இதனை முன்னெடுத்து வருகின்றன.

இதனை வன்மையாக கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு மேகதாது அணை சம்பந்தமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், அப்படி செயல்படுவதைப் போல தெரியவில்லை. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல் சூழல் உள்ளது.

பாமக 2.0 விரைவில்: இது சம்பந்தமாக நான் நாடாளுமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். அப்பொழுது கடுமையான எதிர்ப்புகள் நாடாளுமன்றத்தில் எழுந்தது. இருந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி வலியுறுத்தினேன். மேகதாது அணைத் திட்டம் வரக்கூடாது. அதனை வர விட மாட்டோம். பாமக உயிரைக் கொடுத்தாவது தமிழக மக்களின் உயிர்நாடி பிரச்னைக்கு குரல் கொடுக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க பாமக ஒரு போதும் அனுமதிக்காது. காவிரி ஆறு பெற்ற தாய் போன்றவள்.

மணல் அள்ளுவது தாயை மானபங்கப்படுத்துவதற்குச் சமம். ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கினால் மக்களுடன் சேர்ந்து நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்’’ என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வியூகம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், ’’பாமக 2.0 செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் அனைவரும் தெரிந்து கொள்வீர்கள். இப்போது கூற முடியாது. 2024 நாடாளுமன்றத்தேர்தலில் ஒருமித்த கருத்துகள் உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்போம். இந்தியாவில் ஒரு நாடு ஒரு தேர்தல் சாத்தியமே இல்லை" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்டச் செயலாளர் பிரேம்குமார் ராக்கி முருகேசன், முன்னாள் மாநில துணைச்செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு 'உரிய பதிலளிப்போம்' என பசவராஜ் பொம்மை பேச்சு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.