கரூர் மாவட்டம், கரூர் - கோவை சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் மருத்துவர் வினிதா மோகன் எழுதிய 'பீனிக்ஸ் பெண்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸி வெண்ணிலா, பரணி கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர். ராமசுப்பிரமணியம், முன்னாள் ஐபிஎஸ் பாரி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மலையப்பசுவாமி, பிரபல மருத்துவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
'பீனிக்ஸ் பெண்கள்' எனும் நூலில் உலகம் முழுவதும் சிறந்து விளங்கிய 20 சிறந்த பெண்மணிகள் குறித்தான வாழ்க்கை வரலாற்றை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதியுள்ளதாகவும், பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பெண்ணியம் குறித்த ஆழ்ந்த கருத்துகளோடு இந்நூலை எழுதியிருப்பதாகவும் நூல் ஆசிரியர் வினிதா மோகன் தெரிவித்தார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், கரூர் மாவட்ட முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாமல்லபுரம் வழக்கு - அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசம்