ETV Bharat / state

"காவிரி குடிதண்ணீர் சரிவர கிடைக்கவில்லை": கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்! - Karur - Trichy National Highway

கரூர்: குடிநீர் கிடைக்காத விரக்தியில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்

author img

By

Published : Apr 8, 2021, 10:20 PM IST

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கம்மநல்லூர் ஊராட்சி, பொய்கைபுத்தூர் காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

"காவிரி குடிதண்ணீர் சரிவர கிடைக்கவில்லை"

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக "காவிரி குடிதண்ணீர் சரிவர கிடைக்கவில்லை" என ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.

காலிக் குடங்களுடன் சாலை மறியல்

இதனையடுத்து, காவிரி ஆற்று நீரை சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிக்கே, சரிவர ஊராட்சி நிர்வாகம் வழங்காததைக் கண்டித்தும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும், சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் காலிக் குடங்களுடன் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துப் பாதிப்பு

குடிநீர் கிடைக்காத விரக்தியில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்

இதனால், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை காவல் துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததன்பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 'அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்: இம்முறை என்ன செய்தது தெரியுமா?'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.