கரூர் மாவட்டம் ராயனூர் அருகே இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமிற்கு வெளியே இருந்த மின்சார கம்பத்தில் தேசிய பறவையான மயில் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இதனால் மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மயிலின் உடலை மீட்டு தாந்தோணிமலை வனத்துறை அலுவலர் பாஸ்கரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, மயிலின் உடலை உடற்கூறாய்வுக்காக கடவூர் வனத்துறை அலுவலகத்திற்கு பாஸ்கர் அனுப்பிவைத்தார். உடற்கூறாய்வுக்குப் பின் மயில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரிழந்த தேசிய பறவைக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை!