கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட எலவனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி தலைமையில் மாணவ-மாணவியர் கற்பதற்கும், திறனை மேம்படுத்துவதற்கும் புதிதாக எலவனூர் அகாடமி என்ற பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சின்னதாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதர்சனம் கலந்துகொண்டார். முகாமினை தொடங்கிவைத்த அவர், இளைஞர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊர் பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.