கரூர்: ஈரோடு சாலையில் உள்ள உதயா நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சுந்தரம்(66); அச்சக உரிமையாளர். அச்சக உரிமையாளாராக .
கடந்த 8ஆம் தேதி சுந்தரம் வீட்டைப் பூட்டி விட்டு பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டார். பின்னர், வீடு திரும்பிய அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்சிசியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
உடனடியாக, இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து கரூர் நகர சார்பு ஆய்வாளர் எழிலரசன் வழக்குப்பதிவு செய்து அச்சக உரிமையாளர் வீட்டில் கைவரிசை காட்டிய அடையாள தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் கரோனாவால் உயிரிழப்பு!