கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம், நொய்யல் வாய்க்கால் பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலத்திற்கு, இழப்பீட்டுத் தொகை பெறுவது சம்பந்தமாகப் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நொய்யல் வாய்க்கால் பாசன விவசாய சங்கத் தலைவர் மலையப்பசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இக்கூட்டத்தில் சென்ற ஆண்டைவிட இந்தாண்டு அதிகப்படியான இழப்பீடு பெறுவது குறித்து முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.