முன்னாள் முதலமைச்சர் அண்ணாவிற்கு அடுத்தபடியாக திமுகவில் பெரிய தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனின் 100வது பிறந்த நாள் விழா நேற்று (ஜூலை 11) கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் நாவலர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாலை மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
அதன் பின்னர் திமுக இளைஞரணியினர் இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: அரியலூரில் 7 நாள்கள் முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்க வியாபாரிகள் முடிவு!