கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, மருத்துவமனையில் ஆய்வு மேற்க்கொண்டார், அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு சுமார் 100 நோயாளிகள் சாதாரண காய்ச்சலுக்கு வரும் நிலையில், தற்போது காய்ச்சல் பாதிப்புகளுடன் 30பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு போதுமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.
மேலும், அவர்கள் யாருக்கும் இதுவரை டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியாக டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்க அனைத்தும் தயாராக உள்ளது என்றார்.
இனிவரும் மழைக்காலத்தில் எந்தவித காய்ச்சல் வந்தாலும் அதை தடுப்பதற்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளது என்றார். அதேபோல தீவிர சிகிச்சை கொடுக்க தற்போதே தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 150மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாகவும் டெங்கு காய்ச்சல் வந்தால்கூட அவர்களுக்குத் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் வராமலும், பரவாமலும் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்