ETV Bharat / state

கரூரில் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்ணின் மரண வாக்குமூலம் - கரூரில் தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்

கரூரில் திருமணமான புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 6:38 PM IST

கரூர் மாவட்டம் உள்ள உப்பிடமங்கலம் புதுகஞ்சமுனூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மகள் ராகபிரியா (27). தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 23ஆம் தேதி தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரில் வசித்து வரும் சுதர்சன் (29) என்பவருடன் ராகபிரியாவுக்கு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு பாரதிதாசன் நகரில் உள்ள தெருவில் சுதர்சன் மற்றும் ராகப்பிரியா தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் சுதர்சன் மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த ராகப்பிரியா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கடந்த ஏப் 8ஆம் தேதி இரவு இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ராகப்பிரியா (27) அவரது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, மார்ச் 9 ஆம் தேதி இது குறித்து தகவல் அறிந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் தான்தோன்றிமலை காவல் துறையினர் சம்பவயிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி இரண்டு வாரங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா உயிரிழந்த ராகபிரியாவின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் சுதர்சன் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ராகப்பிரியாவின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தற்கொலை செய்துகொள்ளும் முன், ராகப்பிரியா வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்துள்ளதையும், அத்துடன் ராகப்பரியா கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் சுதர்சனை நேற்று (ஏப்.10) கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ராகபிரியா வெளியிட்ட வீடியோவில், பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டேன். எனது கணவரின் தந்தை, தாய் ஆகியோர் மிகவும் நல்லவர்கள். என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். கணவர் சுதர்சன் நடத்தை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று உருக்கமாக பேசியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9-ஆம் வகுப்பு மாணவி செய்த சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.