கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே விரைவு மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றது. தற்போது புதிதாக கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா சி.சரவணன் இன்று திறந்துவைத்துப் பார்வையிட்டு முதல் வழக்கு விசாரணையை தொடங்கி வைத்தனர்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 250 வழக்குகள் கரூர் நீதித்துறை நடுவர் எண்.1 மற்றும் எண்.2 ஆகிய நீதிமன்றங்களிலிருந்து மாற்றப்படவுள்ளது. இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குள்ளான தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள விரைவு மகிளா நீதிமன்றத்தில் ஏழு வருடங்களுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடிய வகையிலான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டி உணவகத்தையும் நீதியரசர்கள் திறந்து வைத்தனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க கோரிக்கை !