கரூர் நகரின் மையப் பகுதியில் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த 110 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள பழமைவாய்ந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்க நிதி 60 லட்சமும், கரூர் வைஸ்யா வங்கி நிதியிலிருந்து ரூ. 2.25 கோடியும் வழங்கப்பட்டது. மேலும், இதற்கான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'நாப்கின் வாங்கக்கூட காசில்லாமல் சிரமப்பட்டோம்' - வலியுடன் போராடியவர்களுக்கு உதவிய மனிதநேயர்கள்!