கரூரில் உள்ள தனியார் அரங்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் ஜி.பி. சாரதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.பி. சாரதி கூறுகையில், ' குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும். கரூரில் நிலவும் குடிநீர் கட்டுப்பாட்டில் இருந்து மீள, அதிகப் பணம் வசூலித்து லாரியிலிருந்து தண்ணீரைப் பெற வேண்டியுள்ளது.
இதனைப்போக்க ஈரோட்டிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீரைக் கொண்டு வந்து, கரூர் மக்களின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக' தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு