திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சமூக செயற்பாட்டாளர் முகிலன் தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்ட முகிலன் திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் முகிலனுடன் இருந்த காவிரி ஆறு பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான விஸ்வநாதன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த பாலியல் வழக்கில் விஸ்வநாதனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிய போலீசார், 120(பி), 201, 212, உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தனர்.
ஏற்கனவே சிறையில் தன்னை மிரட்டுவதாக நீதிபதியிடம், முகிலன் புகார் அளித்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.