கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று (மார்ச் 27) சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது, "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியின்போது 12 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
தற்போது அதிமுக அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கிவருகிறது. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சித் தொடர வேண்டும். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவினர் பரப்புரையின் போது கண்ணியமாக பேச வேண்டும் - ஸ்டாலின்