கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நான்கு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணி அதிமுக முயற்சியில் கொண்டுவந்துள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, " போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுவது பொய்யான தகவல்.
இந்தப் பாலம் தேவை குறித்து 18.09.2019 அன்று மக்களவையில் அவசர விதி எண் 377இல் பேசியுள்ளேன். 19.09.2019 அன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசி கடிதம் அளித்துள்ளேன். 23.09.2019 அன்று மூன்றாவது முறையாக மக்களவையில் பேசினேன்.
மேலும், அவரவர் பெற்ற பிள்ளைகளுக்கு அவர்கள்தான் பெயர் வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், "கரூர் எம்பியாக நான் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் எனது முயற்சியில் இந்த நான்கு உயர்மட்ட பாலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகள் எம்பியாக இருந்த தம்பிதுரை கரூர் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்" எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கரூர் சட்டப்பேரவை தொகுதியில் பயனாளிகளுக்கு கடனுதவி