கரூர்: மக்களவை உறுப்பினர் ஜோதிமணி நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அந்த மனுவில், "கரூரில் உடனடியாக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள குப்பை கிடங்குகளை அகற்ற, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மணப்பாறை நகராட்சியின் குடிநீர் தேவைக்கு 60 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். மணப்பாறை, விராலிமலை சட்டப்பேரவை தொகுதிகளில் தனி காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, விராலிமலை, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்.
அரசு கல்லூரிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் (Vending Machine) மற்றும் அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த எரிக்கும் இயந்திரம் (Incinerator) அமைக்க வேண்டும்.
பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவியர்களுக்கு நாப்கின் உள்ளிட்ட சுகாதார சாதனங்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதனால் மாணவிகள் மிகுந்த சவாலை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவர்கள் கல்வியும், உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. எனவே இத்தகைய குறைபாடுகளை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உதிரும் சிமென்ட் பூச்சு, இடிந்து விழும் நிலையில் கதவு, ஜன்னல்கள்... அச்சத்தில் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள்!