கரூர் மாவட்டம் மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள மண்மங்கலம், தவிட்டுப்பாளையம், செம்படை, சிப்கோ பகுதிகளில் வரவிருக்கும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆய்வுமேற்கொண்டார். இந்தப் பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுதவலர்கள், எம்.பி. ஜோதிமணியிடம் விளக்கமளித்தனர்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, "கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விரைவில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். முன்னதாக இந்தப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அனைத்துப் பணிகளையும் ஓராண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இந்தப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்த மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கும், கரூர் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்பட அனைவருக்கும் நன்றி.
'45 கல்லூரிகளில் கொள்ளையடித்த பணத்தை தம்பிதுரை பதுக்கி வைத்திருக்கிறார்' - ஜோதிமணி
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மூலமாக எந்தவொரு மேம்பாலங்களும் கட்டப்படவில்லை. இதனால் விபத்து காரணமாக பலர் உயிரிழந்தது பதிவாகியிருக்கின்றது" எனத் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இவர், தம்பிதுரை மேம்பாலங்கள் கட்டியதைக் காண்பித்தால் தான் பதவியிலிருந்து விலக தயார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.