கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் சிவாச்சாரியார். இவரது தாயார் கிரிஜாம்பாள் (76). கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள மகா செல்வ விநாயகர் கோயிலின் அறங்காவலராக சரவணன் சிவாச்சாரியார் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த மே 14ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் சரவணன் சிவாச்சாரியார் உயிரிழந்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் உறவினர்களால் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது மே 15ஆம் தேதி காலை கிரிஜாம்பாள் தனது மகன் உடலைப்பார்த்து அழுது கொண்டே இருந்துள்ளார்.
திடீரென மகனின் உடல் அருகே சென்ற அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகன் இறந்த சோகத்தில் தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : திமுக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளேன்:அதிமுக முன்னாள் அமைச்சர்