கரூர் பேருந்து நிலையம் முன்புள்ள ஆர்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நேற்று (ஜூலை 26) அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்
இதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது, மக்கள் தொகைக்கு ஏற்ப கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கரூர் நகர் பகுதியில் இயங்கும் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் அழைத்துவந்து கொடி பிடித்து கோஷம் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பணம் பட்டுவாடா
மேலும், ஆர்ப்பாட்டம் நிறைவுற்றதும் அந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட மகளிரணி தலைவி சத்தியா தலா 200 ரூபாய் பணப்பட்டுவாடா மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அரசியல் கட்சிகள் போராட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக காணொளியை காணும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த பெண் - புகார்