ETV Bharat / state

‘கரோனா நடவடிக்கைகள் தீவிரமாக வேண்டும்’ - செந்தில் பாலாஜி - ‘கரோனா நடவடிக்கைகள் தீவிரமாக வேண்டும்’- செந்தில்பாலாஜி

கரூர்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் எனச் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி
செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி
author img

By

Published : Apr 1, 2020, 4:42 PM IST

கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.

கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலாவுடன் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர்.

பின்பு காந்தி கிராமம் பகுதியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று கரோனா வைரஸ் நோயாளிகள் பிரிவு மாதிரி படுக்கைகளை ஆய்வுசெய்தனர்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி கூறியதாவது, “கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கரூர் மாவட்டத்தில் இன்னும் தீவிரமாக வேண்டும் குறிப்பாக காய்கறிச் சந்தையில் சுங்கம் வசூலிக்கப்பட்டுவருகின்றது, சுங்கம் அதிகம் வசூல்செய்பவர்கள் உரிமத்தை ரத்துசெய்யாமல் அவர்களுடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் கரோனா வைரஸ் பரவிவரும் இந்நாள்களில் சுங்கம் வசூலிப்பதை மாவட்ட ஆட்சியர் தள்ளுபடிசெய்ய வேண்டும். புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டதன் மூலம் பழைய மருத்துவமனை பூட்டி இருக்கின்றது.

குறிப்பாக இந்த மருத்துவமனை கரூர் மாவட்டத்தில் மையப்பகுதியில் அமைந்து இருக்கின்றது போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும். இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் எடுத்து கூறியிருக்கிறேன், அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி

மேலும் இந்த மருத்துவமனை தொடர்ந்து இயங்க வேண்டும், மேல் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தால் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து சிகிச்சைப் பெறலாம். இந்த மருத்துவமனை செயல்படாமல் இருக்கக் கூடாது” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்! கரோனா காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.