ETV Bharat / state

கோடி கோடியாய் மோடி வீட்டில் ஊழல் பணம்...! ஸ்டாலின் குற்றச்சாட்டு - ஜோதிமணி

கரூர்: பிரதமர் மோடி வீட்டில் ஊழல் பணம் கோடி கோடியாய் இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

stalin
author img

By

Published : Apr 5, 2019, 3:01 PM IST

கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திமுக இதுவரை செய்த திட்டங்களையும், சாதனைகளையும், ஆட்சிக்கு வந்தபின் செய்ய உள்ள திட்டங்களையும் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆனால் தம்பிதுரை செல்லும் இடமெல்லாம் அவரை பொதுமக்கள் விரட்டி அடிக்கும் சூழ்நிலையை ஊடகங்களில் பார்க்கிறோம்.

திமுக ஆட்சியில் நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவர முயற்சித்தபோதும் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என திமுக மறுத்துள்ளது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கருணாநிதியின் முழக்கத்திற்கு ஆதரவளிப்பதுபோல் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்.

துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தி 48 மணி நேரம் கழித்து ஆவணங்கள் சரியாக உள்ளது என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அவருடைய மகன் கதிர் ஆனந்த் இரண்டு நாட்களாக தேர்தல் பரப்புரைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அரசும், மாநில அரசுகள்தான் காரணம். யாரோ ஒரு காவல் அலுவலர் புகார் அளித்தார் என்பதற்காக துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக நான் சொல்கிறேன் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் வீட்டில் கொள்ளையடித்த பணம் அதிகம் இருக்கிறது. ஊழல் பணம் கோடி கோடியாக மோடி வீட்டில் உள்ளது. அங்கு சென்று சோதனை செய்ய வேண்டும்” என்றார்.

முக ஸ்டாலின் பரப்புரை

Intro:ரபேல் ஊழல் பணம் கோடிகோடியாய் மோடி வீட்டில் உள்ளது- திமுக தலைவர் ஸ்டாலின்

Body:கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கரூர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக எந்த அணியில் நாம் இருக்கிறோம் என்று தெரியாமல் உள்ளவர் தான் தம்பிதுரை தொடர்ந்து மத்திய அரசின் ஆட்சியையும் தமிழகத்திற்கு எதிரான செயல்களையும் விமர்சித்து வந்த தம்பிதுரை என்று பாஜகவை எதிர்த்து பேசி வருகிறார் திமுக இதுவரை செய்த திட்டங்களையும் சாதனையும் ஆட்சிக்கு வந்தபின் செய்ய உள்ள திட்டங்களையும் சொல்லி மக்களிடம் ஓட்டுகிறோம் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அறிமுகம் செய்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் தம்பிதுரை செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் விரட்டி அடிக்கும் சூழ்நிலை ஊடகங்களில் பார்க்கிறோம்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பிஜேபி அரசு எதுவும் செய்யவில்லை என தம்பிதுரை பாராளுமன்றத்தில் விமர்சித்தார் திமுக ஆட்சியில் இதுவரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவர முயற்சித்த போதும் தமிழகத்தில் திமுக அனுமதிக்க முடியாது என மறுத்து உள்ளது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கலைஞரின் முழக்கத்திற்கு ஆதரவளிப்பது போல தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி 48 மணி நேரம் கழித்து ஆவணங்கள் சரியாக உள்ளது என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர் இதனால் அவருடைய மகன் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆனந்த் இரண்டு நாட்களுக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் தான் காரணம்.

யாரோ ஒரு காவல் அதிகாரி புகார் அளித்தார் என்பதற்காக துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தி இருக்கிறார்கள் இப்போது எதிர்க்கட்சி தலைவராக நான் சொல்கிறேன் எடப்பாடி ஓபிஎஸ் வீட்டில் கொள்ளையடித்த பணம் அதிகம் இருக்கிறது மேலும் ஊழல் பணம் கோடி கோடியாக மோடி வீட்டில் உள்ளது நீங்கள் சென்று சோதனை செய்யுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.

இந்த மக்கள் விரோத பாசிச மோடி ஆட்சிக்கு முடிவுகட்டும் நாள் ஏப்ரல் 18 இவ்வாறு திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.