ETV Bharat / state

கரூர் மாவட்ட திமுக சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 கரோனா நிவாரணம்

கரூர் மாவட்ட திமுக சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

karur
அமைச்சர் செந்தில்பாலாஜி
author img

By

Published : Jun 19, 2021, 8:29 AM IST

Updated : Jun 19, 2021, 4:52 PM IST

கரூர்: மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றிபெற்றது. இதில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

எளிமையான அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி

தனது தேர்தல் யுக்தியாகப் பொதுமக்களின் காலில் விழுந்து வெற்றிபெற ஆசி கேட்டவர் செந்தில் பாலாஜி. இருதரப்பும் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த போதும், செந்தில் பாலாஜியின் எளிமையான அணுகுமுறை வெற்றி வாய்ப்பை எட்ட உதவியாக அமைந்தது.

udhayanithi
1,279 டன் அரிசி வழங்கும் திட்டம்

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரை தோற்கடித்து வெற்றி மகுடம் சூடினார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் முக்கியத் துறைகளை தன்வசம் வைத்துள்ள அமைச்சராக வலம்வருகிறார்.

karur
கூடுதலாக ஆயிரம் ரூபாய்

கரோனா நிவாரணம்

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிவரும் நிவாரணத் தொகை, 14 மளிகைப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

karur
கரூர் மக்களுக்குக் கொடை வள்ளலான அமைச்சர் செந்தில்பாலாஜி

1,279 டன் அரிசி வழங்கும் திட்டம்

அதேபோல, கரூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 கிலோ அரிசி வீதம் 1,279 டன் அரிசியை வழங்கும் திட்டத்தை, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை வைத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கிவைத்தார்.

தற்போது நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக ஆயிரம் ரூபாய்

மேலும், தன்னை வெற்றிபெற செய்த கரூர் தொகுதி மக்களுக்கு மட்டும் சுமார் 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் கூடுதலாக அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி வருகிறார்.

கரோனா முதல் அலையிலும் உதவினேன்

இது குறித்து அவரிடம் கேட்டபோது, "கடந்தமுறை அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் கரூர் தொகுதி மக்களுக்கு கரோனா முதல் அலையின்போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காகத் தரமான மளிகைப் பொருள்களை உதவியாக வழங்கினேன்.

தற்பொழுது வாழ்வாதாரம் இழந்து நிற்கும் கரூர் தொகுதியில் உள்ள 83,707 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திமுக தலைவர் ஆசியுடன் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் தலா 4 கிலோ அரிசியுடன் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘தமிழ் வளர்ச்சித் துறை’ அமைச்சகம் எங்கே - சீமான் கண்டனம்!

Last Updated : Jun 19, 2021, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.