நாடு முழுவதும் காரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காது கேளாத, வாய்பேசாத, பார்வை திறனற்ற, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு 15 கிலோ அரிசி உள்பட அத்தியாவசிய பொருள்ளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிக்கு இடையூறு இல்லாத வகையில் உதடு அசைவு தெரியும் வகையிலான முகக்கவசத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழங்கினார்.
நிகழ்வில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின்போது வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவல்லி உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 59 ஆயிரத்து 800 அபராதம் வசூல்!