கரூர் மாவட்டத்தில் தாந்தோணி, க. பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர் ஆகிய ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகின்றது.
கரூர் - கோவை சாலை அருகில் கிழக்கு ஆண்டான்கோவில் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
முன்னதாக வாக்களிப்பதற்கு அடையாளமாக அவரது விரலில் மை வைக்கப்பட்டது. அந்த மை வெகுநேரமாகியும் காயாமல் இருந்து, அவை முழுவதும் வாக்குச்சீட்டில் ஓட்டிக் கொண்டதாக அங்கிருந்த அலுவலரிடம் தெரிவித்தார்.
மேலும் மை வைப்பது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை கூறியதோடு, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அன்பழகனை கைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இதனை அறிவுறுத்தவும் கூறினார்.
'அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம்' - ஓபிஎஸ் பெருமிதம்