கரூர் மாவட்டம் பண்ணப்பட்டி பகுதியில் பால் குளிர்விப்பு மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதனடிப்படையில் இன்று (நவ.4) பி. உடையாப்பட்டி கிராமத்தில் ஏழு லட்சத்து எட்டாயிரம் மதிப்பிலான பால் குளிர்விப்பு மையத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அப்போது அவருடன் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மினி பேருந்து சேவை- தொடங்கி வைத்த அமைச்சர்!